பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டுவெண்ட்டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 28 ஆம் தேதி நடந்த முதல் டுவெண்ட்டி 20 போட்டி மழையால் பாதிக்க பட்ட நிலையில், இரண்டாவது டுவெண்ட்டி 20 மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாபர் அசாம் 56 ரன்னும், முகமது ஹபீஸ் 69 ரன்னும் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கி அதிரடி காட்டிய இங்கிலாந்து 19.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது,5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் இயான் மோர்கன் 66 ரன்களும் டேவிட் மாலன் 54 ரன்களும், பேர்ஸ்டோ 44 ரன்களும் விளாசினர்.

மூன்று போட்டி கொண்ட டுவெண்ட்டி 20 தொடரில் முதல் போட்டி ரத்தான நிலையில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மான்செஸ்டர் மைதானத்தில் நாளை நடக்கிறது.

Exit mobile version