இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரெட்லீ… இந்தியா என் மற்றொரு தாய் வீடு..

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக இருந்து வரும் பிரெட்லீ கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் வழங்கியுள்ளார்.

Read more – ஹரித்வார் கும்பமேளா நிறைவடைவு : உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனக்கு இந்தியா எப்போதும் 2-வது வீடு போன்றதாகும். நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் எப்பொழுதும் மெய்சிலிர்க்க வைக்கும். தற்போது அப்படிப்பட்ட பொதுமக்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்த சூழலில் என்னைப்போல் அனைவரும் உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் 37 லட்சம் இந்தியாவிற்கு நன்கொடையாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version