கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மைச் சுற்று கடந்த 27 ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியை எதிர்கொண்டு 7(7)-6(2), 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இன்று 2 வது சுற்றில் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவை எதிர்கொள்ள இருந்த நிலையில் குதிகால் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.