ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி சரியான தேர்வு சங்ககரா வலியுறுத்தல்!!!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே, கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன்.

எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் கச்சிதமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார் சங்ககரா

இதே கருத்தை சில நாட்களுக்கு முன்னர் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் கிரேமி சுமித் கூறியிருந்தார். 

இதற்கிடையே, சவுரவ் கங்குலி 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிவரை, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நீடிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

கங்குலியும், அவரது சகாக்களும் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பில், 2023-ம் ஆண்டுவரை தொடர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும்.

இந்திய கிரிக்கெட் மோசமான நிலையில் தத்தளித்தபோது, அதை தூக்கி நிறுத்தி, ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொண்டுவந்தவர் கங்குலி.

இதேபோல், கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திலும், திறம்பட பணியாற்றுவார் என்று நம்புகிறேன்’ என்று கவாஸ்கர் குறிப்பிட்டு இருப்பதன் மூலம், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் நிர்வாகத்திறன் கங்குலிக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version