கங்குலிக்கு கொரோனா வா? சில நாட்கள் வீட்டு தனிமையில்….

Cricket Association of Bengal President Saurav Ganguly attends the 87th AGM of BCCI at the BCCI headquarters in Mumbai on Wednesday. Express Photo by Prashant Nadkar. 21.09.2016. Mumbai.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவுகிறது குறிப்பாக அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற பாலிவுட் பிரபலங்களையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை ,அந்த வகையில். பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கங்குலி மேற்கு வங்க மாநிலம் பெகலாவில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் வசித்து வருகிறார். அவரது மூத்த சகோதரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளருமான  ஸ்னேகாசிஷ் மொமின்பூரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

ஸ்னேகாசிஷ் மனைவி மற்றும் மாமனார், மாமியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஸ்னேகாசிஷ், கங்குலியின் வீட்டுக்கு வந்து அவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஸ்னேகாசிஷ்-க்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது . இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் . இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அவருடன் தொடர்பில் இருந்த சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். 

மேலும் சுகாதார நெறிமுறைகளின்படி, சவுரவ் கங்குலி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் கங்குலி தன்னை தனிமை படுத்திக்கொண்டார். மேலும் கங்குலி கூறுகையில் தங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு தன் சகோதரர் தினமும் சென்று வந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Exit mobile version