கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் வாழ்த்து

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
தன்னுடைய திறமையான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் தேர்வாகி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் அவரது திறமை நன்கு பளிச்சிட்டது.
அவருடைய லட்சியம் நிறைவேறவும், இந்திய அணிக்காக பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

Exit mobile version