உலகமெங்கும் உள்ள ஐபிஎல் ரசிகர்களின் பலத்தஎதிர்பார்ப்புகளுக்கிடையே இன்னும் சில தினங்களில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கின்றது.

செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் தொடர்ந்து 54 நாட்கள் நடைபெறும். இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் எல்லோரும் எதிர்பார்க்கும் முதல் போட்டியில் சென்றஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல் தொடர் நெருங்குவதால் நாளுக்கு நாள் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல் இந்த தொடர் போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே துபாய் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே இந்த தொடர் பற்றி பல்வேறு கருத்துகளை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதில், தற்போது கொல்கத்தா அணியின் பேட்டிங்பயிற்சியாளராக உள்ள டேவிட் ஹஸ்ஸி இந்த ஐபிஎல் தொடர் பற்றி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இரட்டை சதம் அடிக்கும் வீரர் குறித்தும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : கண்டிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு எங்கள் அணியின் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரசலுக்கு இருக்கின்றது அதற்கான முழு தகுதியும் அவருக்கு உண்டு.
ரசல் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வாரே ஆனார் அவர் 60 பந்துகளை சந்தித்தால் போதும் அவருக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. அவருடைய அதிரடியை நாம் பலமுறை நேரில் கண்டிருக்கிறோம்நிச்சயம் அவர் உறுதியாக இரட்டை சதம் அடிக்க கூடிய வீரர் தான். இந்த முறை அவருக்கு கொல்கத்தா அணியில் முன்கூட்டியே களம் காண அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் இதன் மூலம் அவர் இத்தொடரில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் டேவிட் அஸீ தெரிவித்தார்..
சென்ற 2019ஆம் வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரசல் 510 சேர்த்தது மட்டுமின்றி அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். பல போட்டிகளை தனியொரு ஆளாக நின்று போராடி வெற்றி தேடித்தந்த ரசலின் அதிரடியை பார்த்த நமக்கு டேவிட் ஹசி தெரிவித்த கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.