காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்  பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் போட்டிகள்  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் பங்கேற்றார்.

55கிலோ எடைபிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ பளுதூக்கி இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்(இந்த காமன்வெல்த் போட்டியின் முதல் பதக்கம்) உறுதியானது. அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முதல் இடத்தை பிடிக்காவிட்டாலும் இந்தியா உங்களை நினைத்து கர்வம் அடைகிறது என ஊக்கப்படுத்தியுள்ளார்.

https://twitter.com/ianuragthakur/status/1553328901467738113
Exit mobile version