தங்கம் வென்ற தங்கங்கள்… பி.வி.சிந்து, லக்சயா ஷென் அசத்தல்

காமன்வெல்த் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிஷல் லீயை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 21-15, 21-15 என்ற கணக்கில் போராடி வெற்றிபெற்றார். இதற்கு முன்பு இருவரும் ஆடிய 10 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் சிந்து வெற்றிப்பெற்றுள்ளார். எனினும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதிப்போட்டியில் சிந்துவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமோ என ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் அசத்தலாக வெற்றி பெற்றார்.

பி.வி.சிந்து 2014 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். 2018ல் வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது, காமன்வெல்த் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் பதக்கப்பட்டியலில் 5ம் இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் முன்னேறி 4ம் இடத்தை பிடித்துள்ளது.     

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் லக்சயா ஷென், மலேசியாவின் திசி யோங்குடன் மோதினார். இப்போட்டியில் 19-21, 21-9, 21-16 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார். இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.                                              

Exit mobile version