ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: ஆன்டிம் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஆன்டிம் தங்கப்பதக்கம் வென்றார்.

பல்கேரியாவில்  நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட வீராங்கனை ஆன்டிம் இறுதிப்போட்டியில் கசாக் மல்யுத்த வீரரை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம், அவர், ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவின் சார்பில் ஆன்டிம் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கமும், 62 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கமும், 65 கிலோ எடைப்பிரிவில் சோனம் வெள்ளிப் பதக்கமும், 57 கிலோ எடைப்பிரிவில் சிட்டோ மற்றும் ரீத்திகா வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன்மூலம், இந்திய மகளிர் அணி 160 புள்ளிகளுடன் ரன்னர் அப் கோப்பையையும், 230 புள்ளிகளுடன் ஜப்பான் அணி முதலிடத்தையும், 124 புள்ளிகளுடன் அமெரிக்க அணி 3ம் இடத்தையும் பிடித்தன.

Exit mobile version