சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் தொடரில் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இந்த போட்டியில் 89.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த போட்டின் முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சல் செப்டம்பர் 7-8 தேதிகளில் நடைபெற உள்ள டயமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். இந்த இறுதிச்சுற்றுக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
