துபாய் ஓபன் செஸ்போட்டி அர்ஜூன் எரிகைசி தொடர்ந்து முன்னிலை

துபாய் ஓபன் செஸ் போட்டியில் 6வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 6வது சுற்றி வெற்றி பெற்றுள்ளார்.

22வது துபாய் ஓபன் செஸ் போட்டிகள் மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். இப்போட்டி செப்டம்பர் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், முதல் நான்கு சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்தா ஐந்தாவது சுற்றில் பின் தங்கினார். பின்பு ஆறாவது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தி 5 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4 வீரர்களுடன் இணைந்து 2ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரரான அர்ஜூன் எரிகைசி முதலிடத்தில் இருந்த ரினட்டை 6வது சுற்றில் வீழ்த்தினார். இதன்மூலம் 5.5 புள்ளிகளுடன் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.

Exit mobile version