2-வது டி 20 போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், முதலில் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. அடுத்ததாக 3 டி 20 போட்டிகளில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி வியூகங்கள் வகுத்துள்ளது. இந்திய அணிக்கு தமிழக வீரர் நடராஜன் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஜடேஜா டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version