இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச்ல விளையாட போறாங்க பிங்க் பால்லு… பார்க்குற ரசிகர்களுக்கு அய்யா ! ஜாலி செம தூள்ளு….

இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) உறுப்பினர்கள், காணொலி மூலமாக கலந்தாய்வு நடத்தினர்.இதில் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றை நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே இந்தியாவில் மூன்று முதல் நான்கு மைதானங்களில் பயோ-செக்யூரிட்டி முறையில் இங்கிலாந்து – இந்தியா தொடரை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் முதல் போட்டி பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியாக நடைபெறும். இந்தப் போட்டி கொல்கத்தா அல்லது அகமதாபாத் நகரில் நடைபெற வாய்ப்பு உள்ளது என பி.சி.சி.ஐ கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ள இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version