ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை வெளியீடு : இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

துபாய் :

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2 வது இடத்தை பிடித்து உள்ளது. மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா 2 வது இடத்தை பிடித்து உள்ளது. இதை தொடர்ந்து  அடுத்த ஆண்டு ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட தக்க வைத்துக் கொண்டது. இந்தியா தரவரிசை பட்டியலில் 390 புள்ளிகள் மற்றும் 72.2 சதவீதத்துடன்  (பி.சி.டி) இரண்டாவது இடத்தில் உள்ளது.

பாக்சிங் டே டெஸ்டில் தோல்வியுற்ற போதிலும், இந்தியாவுக்கு எதிரான மெதுவான விகிதத்தை தக்க வைத்துக் கொண்டதற்காக அபராதம் விதித்த போதிலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள் இப்போது 76.6 சதவீத  (பி.சி.டி)  உடன் 322 புள்ளிகளை பெற்று உள்ளது.

Read more – இந்திய அணியுடன் நாளை இணைகிறார் ரோஹித் சர்மா : 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படுவாரா ?

புதன்கிழமை நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து மூன்றாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. நியூசிலாந்து 360 புள்ளிகளை பெற்று உள்ளது.  தொடர்ந்து இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், 166 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5 வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா,இலங்கை,வெஸ்ட் இண்டீஸ்,வங்காள் தேசம் உள்ளன.

Exit mobile version