இந்திய சைக்கிள் வீராங்கனை திரிஷியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!!

ஆகஸ்ட் 14 ஆம் தேதியிலிருந்து டெல்லியில்  உள்ள விளையாட்டு  அரங்கமான இந்திரா காந்தி  தேசிய விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான சைக்கிள் பயிற்சி முகாம்நடைபெற்று வருகிறது.

 இதற்காக மொத்தம் 11 வீரர்கள் வீராங்கனைகள் அவர்களுடன் 4 பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 16 பேர். டெல்லி வந்திருந்தார்கள். இதில்  சைக்கிள் வீராங்கனை “திரிஷியா பால்  “கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி  முகாமில் இணைந்திருந்தார்.   தற்போதுள்ள விதிமுறைகளின் படி அவர் தனியறையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.முகாமில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது.  இதில், சோதனை முடிவுகள் நேற்று  வெளியாகின. அதில் திரியாஷா மட்டும் கொரோனா உறுதியாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதுது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அரங்க வளாகத்திலேயே அவரை தனிமைப் படுத்தி உள்ளனர். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version