டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் : இந்திய வீரர் அதிர்ச்சி தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்விடைந்தார்.
Kidambi Srikanth

டென்மார்க்கின், ஒடென்ஸ் நகரில் சர்வதேச பேட்மிட்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், உலக தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோய் டின் சென் மற்றும், 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் இருவரும் மோதினர்.

ஸ்ரீகாந்த் முதல் செட்டை 22-20 எனக் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை 21-13 என்ற கணக்கில் சோய் டின் சென் கைப்பற்றினார். பரபரப்பான வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் செட்டில், 21-16 என்றக் கணக்கில் சீன தைபே வீரர் சோய் டின் கைப்பற்றி, அரையிறுதிக்கு முன்னேறினார். ஒரு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் இறுதியில், ஸ்ரீகாந்த் 22-20, 13-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தார்.

Exit mobile version