பெங்களூர்- கொல்கத்தா அணிகள் இன்று மோதவுள்ளன. இதில் பெங்களுருக்கு கொல்கத்தா பதிலடி கொடுக்குமா என்று பார்க்கலாம்.
ஐபிஎல் போட்டிகள் பரபரப்பும் அதிக எதிர்ப்பார்ப்புகளுடம் தொடங்கி மக்களைக் கவர்ந்துள்ளது.
நிபுணர்களின் கணிப்பைப் பொய்யாக்கிப் பல திருப்பு முனைகளை நடப்பு ஐபிஎல் தொடர் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் தங்களின் முழு திறமையை உபயோகித்து அடுத்த சபிளே ஆப்பிற்கு தகுதிப் பெறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இன்று இரவும் 7;30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.
இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூர் 11 முறையும், கொல்கத்தா 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.