ஐபிஎல் தொடரில் விளையாடும் சன் ரைஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்ளிட்ட 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடராஜனுக்கு தொற்று உறுதியான போது, ஐதராபாத் – டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டீவ் என வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் மற்றும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது