ஐபிஎல்: மும்பை vs கொல்கத்தா..முழுமையான இரு அணிகள்..பறக்க போகும் பந்துகள்..

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், கடந்த 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் சென்னையை எதிர்கொண்ட மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்நிலையில், இன்று நடைபெறும் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில், மும்பை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி, தினேஷ் கார்த்திக் தலைமையில் இன்று களம் காண்கிறது. இந்த அணி இதுவரை 25 முறை மும்பை அணியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், 4 முறை சம்பியனான மும்பை 9 முறை வெற்றி பெற்றுள்ளது. கே.கே.ஆர் ஆறு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய 10 ஆட்டத்தில் மும்பை அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது.

தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி முனைப்புடன் உள்ளது. வழக்கமாக தொடரின் முதல் பாதியில் சொதப்பினாலும், இரண்டாம் பாதியில் அசத்துவதே மும்பை அணியின் சிறப்பாகும்.

இதனால் ரோஹித் ஷர்மா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை சமாளிக்க சுனில் நரைன் போன்ற பவுலர்கள் சிரமப்பட வேண்டி இருக்கும். இவருடன் டீ காக், பொல்லாட், பாண்டிய பிரதர்ஸ் மற்றும் சூர்யாகுமார் யாதவ் போன்றோர் இணைந்தால் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பந்து வீச்சில் மலிங்கா இல்லாத நிலையில், பும்ராவிற்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. சென்னை அணியிடனான தோல்விக்கு அவரது சொதப்பலும் முக்கிய காரணமாகும். அவருக்கு தோல் கொடுக்க வேகத்தில் போல்ட், பாட்டின்சன் உள்ள நிலையில், சுழற்பந்து வீச்சில் குருணால் பாண்டியா, சாஹர் ஆகியோர் தயாராக உள்ளனர்.

கொல்கத்தா அணியை பொறுத்த வரையில், கடந்த சீசனில் தொடர் நாயகன் விருது பெற்ற ரசல் இம்முறையும் பல வான வேடிக்கைகளை காட்ட காத்திருக்கிறார். தினேஷ் கார்த்திக், ராணா மற்றும் சுப்மன் கில், மார்கன் போன்ற அதிரடி வீரர்கள் வரிசை கட்டி உள்ளனர். பந்துவீச்சில் அந்த அணி வழக்கம்போல், நரனை அதிக அளவில் நம்பியுள்ள நிலையில், வேகத்தில் கம்மின்ஸ், நாகர்கோட்டி ஆகியோர் மிரட்ட தயாராக உள்ளனர்.

அந்த மைதானத்தை பொறுத்த வரையில் சேஷிங் செய்யும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் அபுதாபி மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றது. எனவே, டாஸ் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version