மோர்கனின் அதிரடி அரை சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் இலக்காக வழங்கியது கொல்கத்தா அணி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ராணா களம் இறங்கினர்.ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் ராணா ரன் எதுவுமின்றி வெளியேற,மறுமுனையில் கில் மற்றும் திரிபாதி அதிரடியாய் விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.ராகுல் திவாதியா வீசிய 9 வது ஓவரில் சுப்மன் கில் 36 ரன்களில் அவுட் ஆகி வெளியேற,அதே ஓவரில் சுனில் நரேனும் டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரிபாதி(39 ரன்கள்,34 பந்துகள்) ஸ்ரேயஸ் கோபால் வீசிய 12 வது ஓவரில் ராபின் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்
.திவாதியா வீசிய அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ரன் எண்ணிக்கையை தொடங்காமல் அவுட் ஆக,13 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை பெற்று இருந்தது.கோபால் வீசிய அடுத்த ஓவரில் கேப்டன் மோர்கன் 2 பௌண்டரி,2 சிக்ஸர்களை தெறிக்கவிட,கார்த்திக் தியாகி வீசிய 16 வது ஓவரில் அடுத்தடுத்து ரசல்(25 ரன்கள்,11 பந்துகள்) 2 சிக்ஸர்களை அடித்து அடுத்த பந்தே மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஸ்டோக்ஸ் வீசிய 19 வது ஓவரில் கம்மின்ஸ் ஒரு சிக்ஸர் அடிக்க,அதே ஓவரில் கேப்டன் மோர்கன் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்,1 பௌண்டரி அடித்து 30 பந்துக்களில் அரை சதத்தை கடந்து அசத்தினார்.தியாகி வீசிய கடைசி ஓவர் முதல் கம்மின்ஸ்(15 ரன்கள்,11 பந்துகள்) ஒரு பௌண்டரி அடித்து அடுத்த பந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கடைசி பந்தில் மோர்கன் ஒரு சிக்ஸர் அடித்து அசத்த,20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் இலக்காக வழங்கியது.
கொல்கத்தா அணியில் மோர்கன் 68 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக திவாதியா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.