கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,  மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வி கண்டது. அதிரடி பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோகித் சர்மா (19 ரன்), சூர்யகுமார் யாதவ் (31 ரன்), இஷான் கிஷன் (28 ரன்), ஹர்திக் பாண்ட்யா (13 ரன்), பொல்லார்ட் (7 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் நிலைத்து நிற்கவில்லை. இதனால் மும்பை அணியால் 9 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக்கின் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து விட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ் லின்னுக்கு இடம் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த வெற்றி நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

அந்த அணியின் பேட்டிங்கில் நிதிஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மும்பை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளின் பேட்டிங் வரிசையும் மிகவும் வலுவானதாகும். இதனால் இன்றைய மோதலில் அதிரடியில் எந்த அணி அசத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Exit mobile version