டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்களைச் சாய்த்து சாதனை படைத்துள்ளார்.
யுஏஇ-யில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று கேகேஆர், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடத் தொடங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே தடுமாறியது.
ரஹானே 0, தவாண் 6 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். அதன் பிறகு வந்த ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், சிம்ரன் ஹெட்மயர், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல் ஆகியோரது விக்கெட்களை கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
இதன்மூலம் கேகேஆர் அணிக்காக ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சுனில் நரைன் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
வருண் சக்கரவர்த்தி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.