கிறிஸ் கெயில் வருகை பஞ்சாப் அணிக்கு வெற்றிவாய்ப்பை தருமா ? பஞ்சாப் அணிக்கு 172 இலக்கு

மோரிஸின் அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக வழங்கியது பெங்களூர் அணி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பெங்களூர் அணி சார்பில் தொடக்க வீரர்களாக பட்டிகல்,ஆரோன் பின்ச் களம் இறங்க,மேக்ஸ்வல் வீசிய முதல் ஓவரிலேயே பின்ச் ஒரு சிக்ஸர் அடித்து அசத்த, மறுமுனையில் அவருக்கு துணை நின்ற பட்டிகல் அடுத்தடுத்து பௌண்டரிகளை ஓட விட்டார்.அர்சிதீப் வீசிய 5 வது ஓவரில் பட்டிகல் 13 ரன்களில் வெளியேற,அதன் பிறகு பின்ச்சும்(20 ரன்கள்,18 பந்துகள்) முருகன் அஸ்வின் பதில் கிளீன் போல்ட் ஆனார்.

கேப்டன் கோலியுடன் இணைந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்கள் இருக்கும் போது முருகன் அஸ்வின் வீசிய 11 வது ஓவரில் தூக்கி அடிக்க பார்த்து ஜார்டனிடம் கேட்ச் ஆனார்.கோலி களம் இறங்கியது முதல் அடித்து ஆட,பெங்களூர் அணி 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 103 ரன்களை பெற்று இருந்தது.ரவி பிஸ்னோய் வீசிய அடுத்த ஓவரில் துபே 2 சிக்ஸர்கள் பறக்க விட்டு அடுத்த ஓவரிலேயே அவுட் ஆனார்.சமி வீசிய 18 வது டி வில்லியர்ஸ் வெறும் 2 ரன்களில் வெளியேற,அதே ஓவரில் கேப்டன் விராட் கோலி(48 ரன்கள்,39 பந்துகள்) ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஜார்டன் வீசிய 19 வது ஓவரில் மோரிஸ் ஒரு சிக்ஸர் அடிக்க,சமி வீசிய கடைசி ஓவரில் மோரிஸ் ஒரு பௌண்டரி,2 சிக்ஸர் அடிக்க,மறுமுனையில் உடானா தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்தார்.20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்து,பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக வழங்கியது.

பெங்களூர் அணி சார்பில் மோரிஸ் 25 ரன்களுடனும்,உடானா 10 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

Exit mobile version