கடைசி பந்தில் பெங்களூர் கதையை முடித்த பஞ்சாப் : 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி

ராகுல் மற்றும் கெயிலின் அரைசதத்தால் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
gayle kl rahul

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியில் மோரிஸின் அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்காக வழங்கியது.

பஞ்சாப் அணி சார்பில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்த,விக்கெட் இழப்பின்றி பஞ்சாப் அணி 7 ஓவர்களில் 70 ரன்களை தொட்டது.சஹால் வீசிய 8 வது ஓவரில் அகர்வால்(45 ரன்கள்,25 பந்துகள்) அட்டகாசமாய் ஒரு சிக்ஸர் அடித்து அதே ஓவரில் கிளீன் போல்ட் ஆனார்.ராகுலுடன் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கெயில் இணைய,தொடர்ந்து இருவரும் அதிரடியை வெளிப்படுத்தினர்.


கெயில் மற்றும் ராகுல் அடுத்தடுத்து அரை சதம் அடித்து அசத்தினர்.பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 2 பந்துகளுக்கு 1 ரன் தேவையாக இருக்க கெயில் (53 ரன்கள்,45 பந்துகள்) ரன் அவுட் ஆகி நடையை கட்டினார்.அடுத்து களம் இறங்கிய பூரன் ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இறுதியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 61 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Exit mobile version