கம்மின்ஸ் ஆஹ் இது !என்னா அடி… மும்பைக்கு 149 ரன்கள் இலக்கு

கம்மின்ஸ் கடைசி நேரத்தில் அடித்த அதிரடி அரைசதத்தால் மும்பை அணிக்கு 149 ரன்கள் இலக்காக வழங்கியது கொல்கத்தா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் திரிபாதி களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்த கொல்கத்தா அணி முதல் கோணல் முற்றிலும் கோணலாக இருக்க,11 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 61 ரன்களுடன் கொல்கத்தா அணி தடுமாறியது.

அடுத்து கேப்டன் மோர்கனுடன் இணைந்த கம்மின்ஸ் விஸ்வரூபம் எடுத்து அதிரடியை வெளிப்படுத்தி 36 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.கடைசி ஓவரில் வீசிய கோல்டர் – நைல் பந்தில் மோர்கன் 2 சிக்ஸர்கள் பறக்கவிட, 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து 149 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக வழங்கியது.

கொல்கத்தா அணி சார்பில் கம்மின்ஸ் 53 ரன்களுடனும்,கேப்டன் மோர்கன் 39 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் ராகுல் சஹார் 2 விக்கெட்களும்,போல்ட்,பும்ரா மற்றும் கோல்டர்-நைல் தலா 1 விக்கெட்கள் எடுத்து இருந்தனர்.

Exit mobile version