தோனி ஓய்வு பெற்றபின் அவருக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் வாழ்த்து மழை குவிந்த வண்ணம் உள்ளது தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான மிஸ்டர் கிரிக்கெட் எனும் மைக்கேல்ஹஸ்ஸி தோனி பற்றி கூறியதில் சில.
இந்தியா மாதிரி ஒரு நாட்டுல அதுவும் முக்கியமா மீடியா மற்றும் ரசிகர்கள் நடுவுல ரொம்ப கூலா அமைதியா இருந்தவர் நம்ம தல தான்.
நான் பார்த்தவரைக்கும் கேப்டனா இருந்தா ஏதாவது அட்வைஸ் பண்ணுவாங்க இல்ல என்ன வேணுமோ அதை கேப்பாங்க ரொம்ப முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் அதை கடைபிடிக்க சொல்லுவாங்க, ஆனால் எம்எஸ் தோனி ரொம்ப அமைதியானவர் வீரர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்கிறது மட்டும்தான் அவரோட கவனம் இருக்கும் அதுல அவருக்கு நிகர் அவர்தான் மேட்ச் ஆட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தெளிவா சொல்லிடுவாரு ரிலாக்சா இருங்க சில நாள்ல நாம ஜெயிப்போம் ஒரு சில நாள்ல நாம தோல்வியும் அடையலாம் , ஆனால் களத்துல நீங்க உங்களோட ஆட்டத்தை ஆடுங்க அப்படி மட்டும் தான்” தோனி “சொல்லுவார்.
அவரோட கேப்டன்சில ஆடுறது ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கும் இந்த மாதிரி ஒரு அணுகுமுறையை ஆஸ்திரேலியா கிட்ட கூட நான்பார்த்ததில்லை. அப்புறம் .தோனி கிட்ட சுத்தமா பந்தா இருக்காது அந்த குணம் எனக்கு அவர் கிட்ட ரொம்ப ரொம்ப பிடிச்சது.
அவருக்கு அந்த அமைதியான குணம் முதலிலிருந்து இருக்கணும்னு நினைக்கிறேன் அதாவது ஆஸ்திரேலியாவுக்கு நான் ஆடத் தொடங்கியர்காலத்திலிருந்தே இத நான் பாத்துட்டு இருக்கேன் நீங்க தோனியை யார் கூட கம்பேர் பண்ணாலும் அவரு அதுக்கு மேல தான் .சில சமயங்களில் கிரிக்கெட் வழக்கத்துக்கு மாறான புது முயற்சியை செயல்படுத்துவார் நாங்கல்லாம் என்னடா இப்படி செய்தார் என்று பயத்தில் இருப்போம்.ஆனால் அந்த முடிவுதான் அன்னிக்கு மொத்த ஆட்டத்தையும் மாற்றியிருக்கும் , அப்போ எனக்கு தோணும் இந்த மாதிரி எல்லாம் கூட யோசிக்க முடியுமா? இந்த மாதிரியான ஒரு திட்டத்தை அவர் எப்படி யோசிச்சு இருப்பாரு அப்படின்னு வியந்து பார்த்து இருக்கோம்.என்றார் மைக் ஹஸ்ஸி.