தல ஆட்டத்தில எப்பவும் போல சிக்சர் அதிகம் பயிற்சி பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ விஸ்வநாதன்!!

சென்னை பயிற்சி முகாமில் கலந்துகொண்டிருந்த  தோனி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் பறக்க விட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ கே விஸ்வநாதன்  கூறியுள்ளார்..

அடுத்தமாதம் யுஏஇ யில்தொடங்கவிருக்கும்  ஐபிஎல் தொடருக்கு முதற்கட்டமாக பயிற்சியை மேற்கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை தோனி தலைமையில் தனி விமானம் மூலம்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்சென்னை வந்து சேர்ந்தனர்  இதனை தொடர்ந்து பயிற்சி முகாம் 5 நாட்கள் திட்டமிடப்பட்டது நீண்ட நாட்களுக்குப் பின்னர் பயிற்சியை மேற்கொள்வதால் காயம் பயம் காரணமாக மிகுந்த கவனமாக அனைவரும் பயிற்சி செய்தனர்  .

 இந்நிலையில் பயிற்சி குறித்து தகவல்களை அறிவித்த சென்னை அணியின்  தலைமை அதிகாரி விஸ்வநாதன் தற்போது  பயிற்சியின் முடிவில் தோனியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது மைதானத்தின் அனைத்து பகுதிகளும் அவர் அடித்த சிக்சர் பறந்தது அவர் எப்பொழுதும் போல் நிதானமாகவும் மகிழ்ச்சியுடனும் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

அவரின் திடீர் ஓய்வு முடிவு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவிதமான ஆட்சி இடத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான் என்றார் .பின்பு இந்த ஐந்து நாள் பயிற்சி எந்த வீரரும் முழு உத்வேகத்துடன் மேற்கொள்ளவில்லை ஏனென்றால் நாங்கள் தற்போது நீண்ட இடைவெளிக்கு  பிறகு இந்த பயிற்சியில் ஈடுபடுகிறோம் எனவே அளவான பயிற்சிகள் மட்டுமே வீரர்களுக்கு அளிக்கப்பட்டது  இருந்தாலும்  வீரர்கள் அவர்கள் இயல்பான ஆட்டத்தை  எப்போதும்போல் வெளிக் கொண்டு வந்தனர்.

இங்கிருந்து  யுஏஇ  சென்றபின் மீண்டும் எங்கள் பயிற்சி முழுவீச்சில் தொடங்கும் அங்கு சென்றவுடன் முதற்கட்டமாக 6 நாட்கள் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொள்வோம்  என்று அறிவித்தார். 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று தனி விமானம் மூலம்  சென்னையிலிருந்து  யு ஏ இ புறப்பட்டு சென்றுள்ளனர்.

Exit mobile version