டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி மும்பை அணியை பேட் செய்ய அழைத்தது.அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.ஆரம்பத்திலேயே மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவுமின்றி அவுட் ஆகி வெளியேற,அதன் பிறகு களம் கண்ட,சூர்ய குமார் யாதவ்,இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றோர் அதிரடியை வெளிப்படுத்தி அசத்தினர்.20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் பெற்று இருந்தது.
மும்பை அணியில் அதிக பட்சமாக இஷான் கிஷன் 55 ரன்களும்,சூர்ய குமார் யாதவ் 51 ரன்கள் எடுத்து இருந்தனர்.
டெல்லி அணி சார்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
201 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ரன் எண்ணிக்கையை தொடங்காமல் அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாற,மறுமுனையில் டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டோனிஸ் மட்டும் போராடி 50 ரன்களை கடந்தார்.அதன் பின் அக்சார் பட்டேல் ஓரளவு அடித்து 42 ரன்களில் அவுட் ஆக,20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே அடித்தது.மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது.
மும்பை அணியில் பும்ரா 4 விக்கெட்களை எடுத்து ஐ.பி.எல் வரலாற்றில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.இவருக்கே ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இன்று மும்பை அணியிடம் தோல்வியடைந்த டெல்லி அணி,நாளை நடைபெறும் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணியில் மோதும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ..அந்த அணியிடம் வரும் நவம்பர் 8 ம் தேதி நேருக்கு நேர் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.