சூர்ய குமார் யாதவ்வின் விஸ்வரூபத்தால் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபு தாபி:
முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார்.
மும்பை அணியில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்களை எடுத்து இருந்தார்.
165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டி காக் மற்றும் இஷான் கிஷன் ஓரளவு சிறப்பான தொடக்கம் தந்தாலும் அடுத்தடுத்து விக்கெட் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் கடைசி வரை நின்று அரை சதம் அடித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் சூர்ய குமார் யாதவ் 79 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து மும்பை அணியை வெற்றி பெற செய்த சூர்ய குமார் யாதவ்விற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.