ஆரோன் பின்ச்,ஸ்டீவ் ஸ்மித் அசத்தல் சதம்..இந்திய அணிக்கு 375 ரன்கள் இலக்கு..

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து இந்தியாவிற்கு 375 ரன்கள் இலக்காக வழங்கியது.
India vs Australia: India vs Australia, 1st ODI: Aaron Finch, Steve Smith  tons set India huge 375 to win | Cricket News - Times of India

சிட்னி:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில்இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி அசத்த,முதல் விக்கெட் இழப்பிற்கு இந்த ஜோடி 156 ரன்கள் குவித்தது.சமி வீசிய 28 ஓவர் முடிவில் டேவிட் வார்னர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 69 ரன்களில் நடையைக்கட்டினார்.அதன்பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்த,மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஆரோன் பின்ச் 117 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

பும்ரா வீசிய 4 வது ஓவரில் பின்ச் 114 ரன்களில் நடையைக்கட்ட,தொடர்ந்து வேகம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் வெறும் 62 பந்துகளில் 10 பௌண்டரி, 4 சிக்சர்களுடன் சதம் அடித்து அசத்தி கடைசி ஓவர் வீசிய சமி பந்தில் அவுட் ஆனார்.50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு 375 ரன்கள் இலக்காக வழங்கியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்களும்,பும்ரா,சைனி மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.

தற்போது இந்திய அணி 10.2 ஓவர் முடிவில் 85 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்புடன் தடுமாறிவருகிறது.

Exit mobile version