இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத நிகழ்வு – தமிழக வீரர் நடராஜன்

இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது என்று தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கான்பெர்ரா:

ஐ.பி.எல்.2020 தொடரில் ஹைதராபாத் அணிக்காக ‘யார்க்கர்’ பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நடராஜன் அறிமுகமான முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருந்து தனது விடாமுயற்சியினாலும்,திறமையினாலும் இந்திய அணிக்கு விளையாடி 2 விக்கெட் வீழ்த்திய நடராஜனுக்கு,தமிழக முதல்வர் பழனிசாமி முதல் பல முன்னணி அரசியல் தலைவர்கள்,மற்றும் நடிகர்,நடிகைகள் வரை வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் டி.நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது,இன்னும் பல சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார்.

Exit mobile version