ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.

மும்பை :

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.

இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

Read more – தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை : புத்தாண்டு கொண்டாட்டம்

இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.

Exit mobile version