ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
206 நாடுகளைச் சேர்ந்த விளையான்டு வீரர்கள் பங்கேற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில்
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி புதிய சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை இந்திய ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.