திடீர் சிக்கலில் ஐபிஎல் 2020 , வீரர்கள் பயிற்சிக்கு தடை !!

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வருட ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவை 20-ந்தேதியும், சென்னை சூப்பர் கிங்ஸ்  ஆகிய அணிகள் 21-ஆம் தேதியே துபாய் வந்து சேர்ந்தனர்டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை  23ஆம் தேதி துபாய் வந்து சேர்ந்தனர்.

 தற்போது  கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் அபுதாபியில்  இருக்கின்றன. அந்த இரு அணி வீரர்களும் பயிற்சியில்  ஈடுபட முடியாத காரணத்தால் அங்கு அதிருப்தி நிலவி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  வீரர்களும் சுமார் 7 நாட்களுக்கு மேலாக ஓட்டல் அறையிலேயே தங்க வைக்கப்பட்டு  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  தற்போது வரை அவர்கள் வெளியே வருவதற்கு இன்னும் அனுமதி  வழங்கவில்லை.

முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்சில் 6 நாட்கள்  தனிமைப் படுத்திக் கொண்டால் போதும் அதன் பிறகு பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது  உள்ள நிலையில் அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உயர்ந்து வருவதால், வீரர்கள் 14 நாட்கள் தனிமையில்  இருப்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீரர்கள் ஹோட்டல் அறையிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்  இது வீரர்களை கடும்அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இன்னும் மூன்று வாரங்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல்  போட்டிக்கு தற்போதுவரை அதிகாரபூர்வமான அட்டவணையை வெளியிடவில்லை  எனவே,இந்த வார இறுதியில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபியில் தற்போது பாதிப்பு அதிகமாக இருப்பதால் முதல் கட்ட போட்டி தவிர்த்துவிட்டு இரண்டாம் கட்ட போட்டிகளை அங்கு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக நடக்கும் போட்டிகளை துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடந்த திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் நடக்க உள்ளதால் அபுதாபி மற்றும் துபாயில் தலா 21 ஆட்டங்களும் சார்ஜாவில் 14 ஆட்டங்களும் தற்போது நடத்த திட்டமிட்டுள்ளது.பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில்  விரக்தி அடைந்த இந்த இரண்டு அணிகளும் தற்போது இந்த விவகாரத்தை  ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவிடம் எடுத்துச் சென்றனர். அவர்கள் பிசிசிஐ-யிடம் தெரிவிக்க, பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு இரண்டு அணிகளும் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Exit mobile version