யாரு இந்த மோனு ? சி.எஸ்.கே அணியில் புதுசா வந்தாரு.. 2 ஓவர்ல 20 ரன் தந்தாரு…

பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட மோனு குமார் 2 ஓவர் பந்து வீசி 20 ரன்களை தந்துள்ளார்.
Who is Monu Kumar : Who is Monu Kumar? Know all about CSK pacer who made  his debut against RCB | Cricket News

ஐ.பி.எல் தொடர் 44 வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது.பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.

சிஎஸ்கே அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசல்வுட் நீக்கப்பட்டு இந்த தொடரில் இதுவரை களம் காணாத மோனு குமார் மற்றும் மிட்சல் சான்டர் சேர்க்கப்பட்டனர்.துபாய் மைதானம் சுழல் பந்துக்கு சாதகமானது என்பதால் ஜடேஜா,இம்ரான் தாஹிருடன் இணைத்தார் மிட்சல் சான்டர்.மற்றொரு வீரராக களம் புகுந்த மோனு குமார் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியை சேர்ந்தவர்.இவர் 2014 ல் இந்திய அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன், மன்தீப் சிங் போன்ற வீரர்களுடன் ஆடியுள்ளார்.

இதுவரை மோனு குமார் 2010, 2011 ஆண்டுகளில் சென்னை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.மீண்டும் 2018 ல் சென்னை அணியில் எடுக்கப்பட்ட மோனு குமார் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்தார்.அதன் பலனாக இன்று பெங்களூர் அணிக்கு எதிராக உள்புகுந்தார்.தோனி இவரை பந்து வீச அழைத்தபோது,ஒரு ஓவர் போட்டு முடிப்பதற்கு முன்னரே மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்கி திணறினார்.இருந்தும் இவர் மணிக்கு 125 -130 கி.மீ வேகத்தில்தான் பந்து வீசியா பொழுதும் அதற்கே இவருக்கு மூச்சு திணறியது. விக்கெட் எடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் ரன் விட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனாலோ என்னவோ அதிக வெய்ட் பந்துகளை வீசினார்.

2 ஓவர் இவர் பந்து வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்தார் மோனு குமார்.இதனால் கடுப்பான ரசிகர்கள் என்ன இவர் இப்படி மூச்சு வாங்கி திணறுகிறார், 2 வருடம் பெஞ்சில் உட்கார வைத்தால் இப்படித்தான் நடக்கும் என்றும், மேலும் தோனியையும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Exit mobile version