“எங்க யாருக்கும் கொரோனா இல்லை” : பயிற்சியைத் தொடங்கிய அணிகள்

சி.எஸ்.கே அணியின் சிலரைத் தவிர, மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ள நிலையில், மற்ற அணி வீரர்கள் அனைவரும் அபுதாபியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி, வரும் செப்டம்பா் மாதம் 19-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 10-ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், சி.எஸ்.கே அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் மேலும் சில நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சி.எஸ்.கே. அணி வீரர்கள், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துபாய் சென்றடைந்துள்ள மற்ற அணி வீரர்கள் அனைவரும், தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்..

இதுக்குறித்து அபுதாபி கிரிக்கெட்டின் தலைமைச் செயல் அதிகாரி மேத்யூ பெளச்சர் தெரிவித்ததாவது, இந்தியாவிலிருந்து கிளம்பும் முன்பும், அபுதாபிக்கு வந்த பின்பும் வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு 3 மற்றும் 6-வது நாள்களில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அணிகள் பயிற்சியைத் தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அரசிடமிருந்து அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், அனைவரும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version