பாகிஸ்தான் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய கோரிக்கை

பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரிலும் (அக்டோபர் 20-ந் தேதி), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் (அக்டோபர் 23-ந் தேதி) விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் அட்டவணையை அந்த அணி விரும்பவில்லை என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும், பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என்பதால் அந்த மைதானங்களில் இவ்விரு அணிகளுடன் மோதுவது தங்களது பலத்துக்கு சாதகமாக இருக்காமல் போகலாம் என பாகிஸ்தான் அணி தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை பெங்களூருவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை சென்னைக்கும் மாற்றும்படி கோரிக்கை வைத்து இருப்பதாக தெரிகிறது.மேலும் கிரிக்கெட் வாரிய குழு தரப்பில் ஒரு அணியானது தனது பலம் மற்றும் பலவீனத்துக்கு தகுந்தபடி போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டுகோள் விடுத்தால் போட்டி அட்டவணையை இறுதி செய்வது என்பது இயலாத காரியமாகி விடும். எனவே பாகிஸ்தான் அணியின் குறிப்பிட்ட சில போட்டிகளை எல்லாம் மாற்ற விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version