சென்னை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க அனுமதி!

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாலும் தமிழக அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க தளர்வுகளாலும் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியை காண 50 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 

இதில் முதல் 2 போட்டிகள் சென்னையில் உள்ள நடைபெறுகிறது. முதல் போட்டி 5-ந்தேதியும், 2-வது போட்டி 13ந்தேதியும் நடைபெறுகிறது.   இதில் 13-ம் தேதி நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதேபோன்று 3வது டெஸ்ட் பகல் இரவு போட்டியாக ஆமதாபாத் நகரில் உள்ள மோதேரா ஸ்டேடியத்தில் நடைபெறும்.  இதே ஸ்டேடியத்தில் 4வது போட்டியும் நடைபெற உள்ளது. இந்த இரு ஸ்டேடியங்களிலும் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Exit mobile version