இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தான் நலமுடன் உள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். கபில் தேவ் தற்போது நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியடப்பட்டுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக புதுதில்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில்தேவுக்கு இதய அறுவைச் சிகிச்சை (ஆஞ்சியோ பிளாஸ்டி) செய்யப்பட்டது.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வரும் கபில் தேவை, டாக்டா் அதுல் மாத்தூா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
கபில் தேவிற்கு இதய அறுவைச் சிகிச்சை முடிந்துள்ள நிலையில், நான் நலமுடன் உற்சாகமாக உள்ளேன். விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் கோல்ப் விளையாட ஆவலாக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தற்போது நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும், 5131 ரன்களையும், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களையும் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 253 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுகளையும் கபில்தேவ் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் எனும் பெருமை கபில் தேவுக்கு மட்டுமே உண்டு.