வீரர் அடித்த சிக்ஸர்…சுக்குநூறாக உடைந்த கார் கண்ணாடி!!

அயர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்நாட்டு டி20 போட்டியின் போது, பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரையன் அடித்த சிக்ஸர், அவரது சொந்த கார் கண்ணாடியையே பதம் பார்த்துள்ள ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அயர்லாந்தில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் லீன்ஸ்டர் அணிக்காக விளையாடிய கெவின் ஓ பிரையன், 37 பந்துகளில் 82 ரன்கள் அடித்து விளாசினார். இதில் 3 பவுண்டரிகளுடன், 8 சிக்ஸர்களும் அடங்கும். இதில் பிரையன் அடித்த ஒரு சிக்ஸர் தான், மைதானத்துக்கு வெளியே சென்று, பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அவருடைய டொயாட்டோ காரின் மீது விழுந்தது. இதில் காரின் பின்பகுதிக் கண்ணாடி முற்றிலுமாக நொறுங்கி சுக்குநூறானது.

போட்டி முடிந்ததும் தன் காரை வந்து பார்த்த பிரையன், பின்பகுதிக் கண்ணாடி முழுவதுமாக உடைந்திருந்ததைப் பார்த்தும், தான் அடித்த சிக்ஸரில், தனது காரின் கண்ணாடியே நொருங்கியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். உடனே கண்ணாடி உடைந்த காருக்குள் அமர்ந்து,  ஃபோட்டக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

போட்டியின் பின்னர், கிரிக்கெட் வீரர் தனது காரை நேராக டொயோட்டா சர்வீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், டொயோட்டா நிறுவனத்தின் தூதரே கெவின் ஓ பிரையன் என்பது தான். இதுக்குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இனி காரில் செல்வதற்கு ஏ.சி. தேவையில்லை என்றும், அடுத்தமுறை சற்று தொலைவிலேயே காரை பார்க் செய்துக்கொள்வேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

அணிக்கு வெற்றித் தேடி தந்த பெருமையில், கார் கண்ணாடி உடைந்ததை பொருட்படுத்தாமல், சிரித்தபடியே வெற்றியைக் கொண்டாடியுள்ளார், கெவின் ஓ பிரையன்.

Exit mobile version