பஞ்சாப் நிலைமை இன்னைக்கு பாவம்..சீக்கிரம் பெட்டிய தூக்கிட்டு வீட்டுக்கு போவோம்…

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் தகுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
IPL 2020: Chris Gayle scores 31st IPL fifty during KXIP-RR clash | Cricket  News – India TV

அபு தாபி :

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் பெற்று இருந்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 99 ரன்களும்,கேப்டன் கே.எல்.ராகுல் 46 ரன்களும் எடுத்து இருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.

186 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா சிறப்பான தொடக்கம் தர,அதன் பிறகு வந்த சஞ்சு சாம்சனும் 48 ரன்கள் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.ராஜஸ்தான் ராயல்ஸ் 186 என்ற வெற்றி இலக்கை 17.3 ஓவர்களில் விரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களும்,சஞ்சு சாம்சன் 48 ரன்களும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர்.இந்த போட்டியில் 2 விக்கெட் மற்றும் அரை சதமடித்த பென் ஸ்டோக்ஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Exit mobile version