ஸ்டோக்ஸ் என்னா அடி…சும்மா சரவெடி…

ஸ்டோக்ஸ் சதம்,சாம்சன் அரை சதத்தால் மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
IPL 2020, RR vs MI Live: Pattinson removes Uthappa, Smith in powerplay as  Rajasthan chase 196

அபு தாபி:

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் அடித்தது.கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆரம்பத்தில் 2 விக்கெட் இழந்து தடுமாறினாலும் பின் ஸ்டோக்ஸ் சஞ்சு சாம்சன் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதிரடியாக விளையாடி ஸ்டோக்ஸ் 59 பந்துகளில் சதம் அடிக்க,மறுமுனையில் சஞ்சு சாம்சன் அரை சதத்தை கடந்து அசத்தினார்.12 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டோக்ஸ் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டோக்ஸ் 107 ரன்களுடனும்,சஞ்சு சாம்சன் 54 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருது சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கப்பட்டது.

Exit mobile version