ஓய்வு அறிவித்த பின் கட்டிப்பிடித்து அழுதோம் :ரெய்னா!!

இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தன்று 19:29 மணி நேரத்தில் சர்வதேசகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்து முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார்.

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோனி கடைசியாக  இந்திய அணிக்காக விளையாடினார்,  அதில் இந்திய அணி  18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம்  தோற்றது.

தல தோனியின் ஓய்வு  செய்தி அறிவித்த சில நிமிடங்களுக்கு பிறகு ரெய்னாவும் இன்ஸ்டாகிராமில் தனது அதிர்ச்சியான ஓய்வை அறிவித்து தல தோனியுடன் இணைந்தார்  இருப்பினும், சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு  அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) தான் பிசிசிஐ தங்கள் ஊடக வெளியீட்டில் உறுதிப்படுத்தியது.

இது குறித்து சுரேஷ் ரெய்னா சமீபத்தில் அளித்த பேட்டியில்  தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எனக்கு முன்னரே தெரியும். அவர் சென்னை வந்த பிறகு ஓய்வு குறித்து தெரிந்து கொண்டதாக சின்ன தல தெரிவித்தார். எனவே  நானும் தயாராக இருந்தேன்.”என்றார் 

நான், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர் மற்றும் கர்ன் ஷர்மா ஆகியோர் பட்டாயா  விமானத்தில் 14 ஆம் தேதி ராஞ்சியை  அடைந்தோம், மேலும் மஹி பாய் மற்றும் மோனு சிங் ஆகியோரை  அங்கிருந்துஅழைத்துச் சென்றோம், ”என்று ரெய்னா கூறினார். “எங்கள் ஓய்வை அறிவித்த பிறகு, நாங்கள் நிறைய கட்டிப்பிடித்து அழுதோம். நான், பியூஷ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் கர்ன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து, எங்கள் தொழில் மற்றும் எங்கள் உறவு பற்றி பேசினோம். “என தெரிவித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2020 சீசனில் நம்பமுடியாத ஜோடி சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் மீண்டும் மஞ்சள் நிறத்தில் களம் காணுவார்கள் அறிக்கையின்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி போட்டியின் முதல் ஆட்டத்தில்  விளையாடுகிறது.

Exit mobile version