இதுக்கு கொல்கத்தா விளையாடாமையே இருந்திருக்கலாம்..பெங்களூருக்கு அப்படியே தூக்கி வெற்றிய கொடுத்திருக்கலாம்….

சிராஜ் மற்றும் சகாலின் அற்புதமான பந்து வீச்சால் பெங்களூர் அணிக்கு 85 ரன்கள் மட்டுமே இலக்காக வழங்கியது கொல்கத்தா அணி
RCB vs KKR Live Cricket Score Online, IPL 2020 Match 39 Live Streaming  Updates: Siraj, Chahal put RCB on top; KKR seven down - Sportstar -  Sportstar

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக தொடக்க வீரர்களாக சுப்மன் கில்,திரிபாதி களம் இறங்கினர்.பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சால் கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் அடுத்தடுத்து 5 விக்கெட் இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

13 வது ஓவர் வீசிய சஹால் பந்தில் கம்மின்ஸ்(4 ரன்கள்,17 பந்துகள்)பட்டிக்கலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.மறுமுனையில் நிலைத்து நின்று கேப்டன் மோர்கன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த,15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 50 ரன்களை கடந்தது.வாஷிங்டன் சுந்தர் வீசிய 16 வது ஓவரில் மோர்கன்(30 ரன்கள்,34 பந்துகள்) ஒரு பௌண்டரி ஓட விட்டு அடுத்த பந்தே குர்கீர்த் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

18 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் பெற்று இருந்தது.பெர்குசன் மற்றும் குல்தீப் யாதவ் ஓரளவு நிலைத்து நின்று ஆடி எடுக்க,கடைசி பந்தில் 2 ரன்களுக்கும் முயற்சி செய்து குல்தீப் யாதவ்(12 ரன்கள்,19 பந்துகள்) ரன் அவுட் ஆகி நடையை கட்டினார்.20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூர் அணிக்கு 85 ரன்கள் இலக்காக வழங்கியது.

கொல்கத்தா அணியில் பெர்குசன் 19 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்களும்,சகால் 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.

Exit mobile version