உத்தரகாண்ட் பனிச்சரிவிற்கு ரிஷப் பண்ட் தன் சம்பளத்தை நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளார்.
உத்தரகாண்ட் :
சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், பனி உருகி பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அறிவித்த நிலையில், மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read more – 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் : ப. சிதம்பரம் சாடல்
இந்த துயரம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது ஆட்ட வருமானத்தில் கொடுக்க முன்வந்ததும் அல்லாமல், மற்ற வீரர்களையும் உதவ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரகண்டில் இந்த சேதமும் உயிரிழப்புகளும் என்னை வலியில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப் பணிகளுக்காக என் போட்டி சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன். மக்களும் மற்ற வீரர்களும் இதற்கு முன் வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.