தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் : 27 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை

டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கான 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது. இந்தப் போட்டியில் ரஹானே அவுட்டானதும் பேட் செய்ய வந்த ரிஷப் பண்ட், 27 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

Read more – விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கிருந்த சீக்கியர் : விசாரணையில் கொரோனாவிற்கு பயந்து இருந்ததாக தகவல்

இதற்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர்கள் தோனி 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தார். இப்போது குறைவான 27 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பன்ட். அதற்கு அடுத்ததாக 1000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்களில் பரூக் இஞ்சினீர், சாஹா, நயன் மோங்கியா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version