அர்ஜூனா விருது என்பது என் கனவு” அதனைப் பெற என்ன சாதிக்க வேண்டும்”பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீராங்கனை கேள்வி !

ஒரு மல்யுத்த  வீராங்கனையாக அர்ஜூனா விருதைப்  பெறுவதற்கு வேற என்ன சாதனை எல்லாம் நான் செய்ய வேண்டும்வேண்டுமென்று  எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் கேள்வி எழுப்பி கடிதம்அனுப்பியுள்ளார்.

மத்திய அரசு  நடப்பு ஆண்டிற்கான கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோனாச்சார்ய விருதுகளை கடந்த சில  தினங்களுக்கு முன்  அறிவித்து இருந்தது இதில் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்  அர்ஜூனாவிருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தார் ஆனால் கடைசியில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 சாக்ஷி மாலிக்  2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில்  வெண்கலம் பதக்கம் வென்றிருந்தார்  இதனடிப்படையில் அவருக்கு ஏற்கனவே கேல் ரத்னா விருது  வழங்கப்பட்டிருந்தது.

அதன்பின்பு. 2017 காமன்வெல்த் போட்டியில் தங்கம்  என்றுள்ளார் மற்றும். ஆசிய ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றுள்ளார் 2018 ஆம் வருடம் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்  வென்றுள்ளார். எனவே,இந்த வருடம் தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும் என சாக்ஷி மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தார், ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை  அவரின் பெயர் விருது பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அவர்  விளையாட்டுத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜூக்கு  மற்றும் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் தனக்கு முன்னர் கேல்ரத்னா விருது வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஒரு விளையாட்டு வீரர்  என்றாலேஅவர்கள் எப்போதும் தங்களை ஆபத்தில்  ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள் .எனவே ஒவ்வொரு விளையாட்டு  வீரர்களுக்கும்  நாம் அனைத்து  விருதுகளையும் வாங்க வேண்டுமென்ற  எண்ணம் எப்பொழுதும் உண்டு என்றும் நான் அர்ஜுனா விருது வாங்குவதற்கு இதற்குமேல் என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமென்றும் எனக்கு தெரியப்படுத்தவும் . அர்ஜூனா விருது என்பது என் கனவு” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version