சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்குவது, நடப்பாண்டிற்கான ஐபிஎல் சீசனுக்கு கூடுதல் சிறப்பு என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இறுதியாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின், அரையிறுதிப் போட்டியில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எந்த ஒரு தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார்.
தோனியை களத்தில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆகஸ்டு 15ம் தேதிஅன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாட உள்ளார்.
இந்த சூழலில், தோனியை மீண்டும் களத்தில் பார்ப்பது நடப்பாண்டிற்கான ஐபிஎல் சீசனுக்கு கூடுதல் சிறப்பு என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் பேசுகையில் ‘‘இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். சக வீர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் தோனி மீண்டும் களத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கிறது.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும்போது ஏராளமான பழைய போட்டிகளை பார்த்து நேரத்தை செலவழித்ததாகவும், என்னுடைய சொந்த இன்னிங்ஸ் உள்பட பலவவற்றை குறித்து ஆராய்ந்தேன் என்றும் பேசியுள்ளார். மேலும், கிரிக்கெட் இந்தியர்கிளின் டிஎன்ஏ-வில் ஒரு பகுதியாக இருக்கிறது. அது திரும்புவதற்காக நாங்கள் பெருமூச்சுடன் காத்திருக்கிறோம்’’ எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.