டி- 20 ஆடுகளம் பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக உள்ளது ஷேன் வார்னே.
டி- 20 ஆடுகளம் பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக உள்ளது ஷேன் வார்னே.
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி இந்த வருடம் உலகெங்கும் பரவியுள்ள கொரானா தாக்கத்தால் நடைபெறவில்லை.
ஆனால் எப்படியும் இந்த வருடத்தில் ஐபிஎல்-2020 தொடரை நடத்தியே ஆக வேண்டுமென பிசிசிஐ முடிவாக இருந்தது.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதிலிருந்து சில வீரர்கள் வெளியேறினதால் சர்ச்சை ஆனது. ஆனாலும் எதிர்பாராத விதத்தில் மேட்ச் தினமும் த்ரிலிங்காக் நடைபெறு வருகிறது. அத்துடன் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் டி-20 தொடரின்போது மைதானம் பேட்டிங் செய்ய மட்டுமே ஏற்றதாக உள்ளது என்று முன்னாள் வீரர் ஷேன் வார்னே விமர்சனம் தெரித்துள்ளார்.
மேலும் பேட்டிங்கிற்கும் பந்திற்கும் சம அளவில் மைதானம் இருக்க வேண்டும்.ஒரு மேட்ச்சில் அதிகப்பட்டசமாக பவுலர்கள் 5 ஓவர்கள் வீச வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தன் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருப்பவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே என்பது குறிப்பிடத்தக்கது.